தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு உணவு மற்றும் மருந்து வழங்குவதற்காகத் தஞ்சையில் செயல்படும் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று ரோபோ இயந்திரந்தை உருவாக்கியதுடன், அதை மருத்துவக்கல்லூரியின் பயன்பட்டுக்காகவும் வழங்கினர்.
இதனால் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்டவற்றை வழங்குவதற்காகத் தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் ரோபோ தயாரிக்கப்பட்டது. இந்த ரோபோ இயந்திரத்தை மருத்துவக் கல்லூரியின் பயன்பாட்டுக்காகப் பல்கலைக்கழகத்தின் சார்பில் மண்டல கொரோனா தடுப்புக் குழு அலுவலர் சண்முகம், கலெக்டர் கோவிந்தராவ், மருத்துவக்கல்லுாரி முதல்வர் குமுதா லிங்கராஜ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

