224
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு முழுவதுமாக குப்பைகள் நிறைந்த பகுதியாக காட்சி தருகிறது.கடற்கரைத் தெருவில் இருக்கும் தொடக்கப்பள்ளி,சாலை என தெருவின் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பைகள்,பிளாஸ்டிக் கப்,போன்றவை நிறைந்து காணப்படுகின்றன. மேலும் சாக்கடை கழிவுநீரிலும் குப்பைகள் தேங்கி இருப்பதால் சுகாதர சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.ஏற்கனவே அதிரை முழுவதும் நோய் பரவிக்கொண்டிருக்கும் நேரத்தில் இது போன்ற குப்பைகளால் சுகாதர சீர்கேடுகள் உருவாகும் அபாயம் உள்ளதாக அத்தெருவாசிகள் கவலை தெரிவித்தனர்.இந்த குப்பைகள உடனடியாக அப்புறப்படுத்த அதிராம்பட்டிணம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.