Home » அதிரை டூ பட்டுக்கோட்டையும், நான் சந்தித்த காவலர்களும்!

அதிரை டூ பட்டுக்கோட்டையும், நான் சந்தித்த காவலர்களும்!

by அதிரை இடி
0 comment

ஊரில் அலைந்து திரிந்துவிட்டேன், எங்கேயும் அந்த மருந்துகள் ஸ்டாக் இல்லை. மிகவும் அவசரம் என்பதால் பட்டுக்கோட்டையில் உள்ள மருத்துவமனையின் மருந்தகத்திலேயே அந்த மருந்துக்களை வாங்கலாம் என முடிவு செய்து அனைத்து மருத்துவ ரெக்கார்டுகளையும் எடுத்துக்கொண்டு பட்டுக்கோட்டை நோக்கி பயணமானேன். முதல் செக் போஸ்ட், சேண்டாக்கோட்டை! அங்கு எஸ்.ஐ வேறொருவருடன் பேசிக்கொண்டிருந்ததால், அங்கிருந்த இரு காவலர்கள், எங்கு செல்கின்ரீர்?? எதற்கு??? என என்னிடம் கேள்வி எழுப்பினர். எல்லாத்திற்கும் விளக்கம் கொடுத்தாகிவிட்டது. அப்போது அங்கு வந்த அதிரையின் அரசியல் புள்ளி ஒன்று, ஒன்றிய கவுன்சிலரின் பெயரை சொல்லிவிட்டு பட்டுக்கோட்டை நோக்கி பயணமாகியது. நானோ அப்படியே நின்றேன். பின்னர் என் அருகே வந்த எஸ்.ஐ, மருத்துவரின் பெயரை கேட்டதும் ரெக்கார்டுகளை பார்த்து மருந்து வாங்க செல்லுங்கள் என அனுமதித்தார். ஆனால் கடைநிலை காவலர் ஒருவர், சூழ்நிலையை புரிந்துக்கொள்ளாமல் “ஏன் மொத்தமாக மருந்துக்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டியது தானே” என்றார். அதற்கு நானும் சென்றமுறை (தடைக்காலம் என்பதால் தொலைப்பேசியில் மருத்துவர் கூறிய ஆலோசனைப்படி) 15 நாட்களுக்கு தேவையான மருந்துக்களை வாங்கி சென்றதையும், தற்போது அது முடிந்துவிட்டதால் மீண்டும் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் வாங்க செல்வதாக விளக்கினேன். ஆனால் மீண்டும் மீண்டும் என்னை மட்டுமே நோக்கி அந்த கேள்வியை கேட்டவாறே இருந்தார். உடனே இதனை கவனித்த எஸ்.ஐ, அந்த மருத்துவரின் பெயரை சொல்லி தம்பி நீங்க மருந்து வாங்க போங்க! என கூறினார். பின்னர் முதல்சேரி அருகே இருந்த 2வது செக்போஸ்ட்டில் காவலர்கள் என்னை மடக்கினர். அங்கு பட்டுக்கோட்டை செல்வதற்கான காரணத்தை கூறியதும் ஆவணங்களை பார்த்துவிட்டு பணியுடன் என்னை முன்னேறி செல்ல அனுமதித்தனர். இதேபோல் மணிக்கூண்டு அருகே இருந்த காவலர்களும் காரணம் அறிந்து சிறப்பாக செயல்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து இரு நாட்கள் கழிந்தபோதும் அந்த கடைநிலை காவலர் பேசிய தொனியும், பேச்சும் இன்னமும் என் மனதிலேயே ஓடிக்கொண்டு இருக்கிறது. அதிகாரியும் சக காவலர்களும் யதார்த்த சூழலை புரிந்துக்கொண்டு நிதானமாக செயல்பட்ட நிலையில், அந்த காவலர் மட்டும் ஏன் மிரட்டல், அறிவற்ற தொனியை கையில் எடுத்தார் என்பது கொரோனா மருந்தை போன்ற கேள்வி தான்…

-சாலிஹ்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter