43
அதிராம்பட்டினம்: ரமலான் மாதம் வந்தாலே நினைவுக்கு வருவதே நோன்பு கஞ்சிதான்.
ஆனால் கொரோனா லாக்டவுனால் பள்ளிவாசல்கள் பூட்டப்பட்ட நிலையில் கஞ்சி காய்ச்சவும் அரசால் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் பள்ளி கஞ்சியை மட்டுமே நம்பி இருந்த ஏழை நோன்பாளிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட சிலர் கஞ்சியை வணிக பொருளாக்கி விற்பனை செய்து வருகின்றனர்.
இது வரவேற்க்க கூடியது என்றாலும், விலை அதிகமாக உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
உணவகங்களுக்கு அனுமதியளிக்கும் அரசு பள்ளிகளில் கஞ்சி காய்ச்ச அனுமதிக்க வேண்டும் எனவும், சமூக இடைவெளி விட்டு மக்களுக்கு விநியோகம் செய்ய அறிவுரை வழங்கி நடைமுறை படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.