தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராவ் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு துறை மூலம் இந்தியன் ரெட்கிராஸ் மற்றும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் உதவியுடன் 15 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கப்பட்டது.
கொரோனா தொற்றின் காரணமாக அரசால் போடபட்ட ஊரடங்கு உத்தரவால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர்.இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வுத்துறை சார்பாக 10கி அரிசி மற்றும் மளிகை பொருட்களை 15 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வழங்கினர்.
இந்நிகழ்வில் தஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவீந்தரன்
,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி ரெட்கிராஸ் பொறுப்பாளர் நூருல் அமீன் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.


