சென்னை : சென்னையில் பெய்யும் கனமழை மேலும் ஒருமணி நேரம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். மாலை 5 முதல் தற்பொழுது வரை மழை பெய்ந்து வருகிறது. 10 செ.மீ. மழை பெய்துள்ளது என்று தெரிவித்தார்.
பலத்தமழை காரணமாக சென்னையில் சாந்தோம் நெடுஞ்சாலை முடங்கியது. சாந்தோம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் பெரும்பாலான பேருந்துகள் வராததால் பஸ்-ஸ்டாப்பில் பயணிகள் தவித்து வருகின்றனர். மழை நீர் சாலைகளில் ஓடுவதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மேலும் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் புறநகர் மின்சார ரயில்கள் வேகம் குறைக்கப்பட்டது.