109
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் பேரூராட்சியை சுற்றியுள்ள தெருக்களில் சாலை வசதியில்லாமல்,மேடு,பள்ளமாகவும், கடந்த சிலநாட்களாக பெய்துவரும் மழையால் பள்ளமான சாலைகளில் நீர் நிறைந்து காணப்படுகிறது.இதனால் சாலை எது என்று தெரியாத அளவிற்கு சாலை முழுவதும் மழைநீர் நிரம்பிக் காணப்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.அதிராம்பட்டிணம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை போர்கால அடிப்படையில் உடனே பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
படங்கள்:கடைத்தெரு மார்க்கெட்,SMA அன்வர் பந்தல் கடை வளைவு.