சென்னையின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. விடிய விடிய கொட்டிய மழையால் அதிகபட்சமாக மெரீனா கடற்கரை, டிஜிபி அலுவலகம் பகுதியில் 30 செமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் 12 மணிநேரம் விடாமல் கொட்டிய மழையால் வெள்ளக்காடானது. சென்னையின் சில இடங்களில் அதிகபட்சமாக மெரீனா கடற்கரை, மயிலாப்பூர் டிஜிபி அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் 30 செமீ மழை பதிவானது. சத்யபாமா பல்கலைக்கழகம் பகுதியில் 20 செமீ பதிவானது.
தரமணியில் 19 செ.மீ மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 18 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது. அண்ணா பல்கலையில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 14 செமீ மழையும் புழலில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் எனவும் சென்னையின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.