Sunday, July 21, 2024

நீங்க நல்ல புருஷனா!!!

Share post:

Date:

- Advertisement -

ஊருக்கு வலிமை வாய்ந்த அரசனாக இருந்தாலும் அவன் தனது வீட்டுக்கு
(அதாவது மனைவியருக்கு) சிறந்த புருஷனாக வாழ கற்று கொள்ளவில்லை என்றால் அவனை சிறந்த ஆண் மகன் என்று சொல்ல இயலாது

மேலோட்டமான நடவடிக்கைகளின் மூலம் ஒரு மனிதன் யாரை வேண்டுமானாலும் கவர்ந்தவனாக வாழ்ந்திட முடியும்

ஆனால் தெளிவான நடவடிக்கை இல்லாது எந்த புருஷனாலும் தனது மனைவியை கவர முடியாது

மனைவியை அதட்டி கொண்டே இருப்பது ஆண்மையின் அழகு அல்ல அவளை சிறந்த அரவணைப்பால் கவுருவதே உண்மையான ஆண்மை தனம்

புத்தாடையும் உண்ண உணவும் தருவதற்க்கு ஒரு பெண்ணுக்கு அவனுடைய பெற்றோரே சிறந்தவர்கள்

அவர்களை தாண்டி அவள் மீது பரிவை காட்ட உலகில் உறவுகள் இருக்காது

அதே நேரம் அவளது உளவியல் மற்றும் உடலியலை கருத்தில் கொண்டு நடக்கும் புருஷனே உண்மையில் மனைவியரின் பாக்கியம்

யாரோ ஒரு பெண்ணுக்கு பரிவை காட்டும் ஆண்களின் உள்ளங்கள் தனது  மனைவியரின் இயலாமையை குறையாக கண்டால் அது அறிவாளித்தனம் அல்ல

தனக்கு மட்டுமே ரசிக்கும் மனதும் ருசிக்கும் நாவும் உண்டு என்று ஒரு புருஷன் நினைத்தால் உண்மையில் அவன் தான் சுயநலத்துக்கு சொந்தக்காரன்

காத்திருந்து விழி பூத்திருந்து தன் புருஷனின் வருகையை எதிர் பார்க்கும் மனைவியருக்கும் ரசிக்கும் தன்மையும் ருசிக்கும் உணர்வு உண்டு என்பதை உணர்ந்து நடைபோடுபவனே உண்மையில் சிறந்த புருஷன்

கோபத்தால் கை ஓங்கும் போது மனைவியரின் தியாகங்கள் கண் முன் வந்து நின்று சில நொடிகள் கோபத்தை அடக்கினால் கூட அவன் பாசமான புருஷன்

தன்னை ஈன்றெடுத்த தாய்மைக்கு மதிப்பளிக்காதவனும் தன்னையே ஒப்படைத்துள்ள மனைவியருக்கு மதிப்பளிக்காதவனும் தரத்தில் கீழ் நிலை பிறவிகளே ஆவார்கள்

அடிக்கும் கை தான் அனைக்கும் என்று தனது ஆண்மைக்கு பழமொழி உருவாக்கியுள்ள புருஷன்மார்களே
நீங்கள் அனைக்கின்ற மனைவியரின் ஜீவன் தான் உங்களுக்காக வாழ்நாள் முழுதும் துடிக்கும் என்பதை மறவாதீர்கள்

  இப்போது சிந்தியுங்கள் நீங்கள் சிறந்த புருஷனா ?

٤٢ – ﻋَﻦْ ﺍَﺑِﻲْ ﻫُﺮَﻳْﺮَﺓَ ؓ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮْﻝُ ﺍﻟﻠﻪِ ﷺ : ﺍَﻛْﻤَﻞُ
ﺍﻟْﻤُﺆْﻣِﻨِﻴْﻦَ ﺍِﻳْﻤَﺎﻧًﺎ ﺍَﺣْﺴَﻨُﻬُﻢْ ﺧُﻠُﻘَﺎ، ﻭَﺧِﻴَﺎﺭُﻛُﻢْ ﺧِﻴَﺎﺭُﻛُﻢْ ﻟِﻨِﺴَﺎﺋِﻜُﻢْ

ஈமான் உடையவர்களில் அழகிய குணம் படைத்தவரே பூரணமான விசுவாசம் (ஈமான்) உடையவர்
உங்களில் மிகச் சிறந்தவர் தன் மனைவிமார்களுடன் நன்முறையில் நடந்து கொள்பவரே என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் .முஸ்லிம் அஹ்மத்

ﻳٰۤـﺎَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺎﺱُ ﺍﺗَّﻘُﻮْﺍ ﺭَﺑَّﻜُﻢُ ﺍﻟَّﺬِﻯْ ﺧَﻠَﻘَﻜُﻢْ ﻣِّﻦْ ﻧَّﻔْﺲٍ ﻭَّﺍﺣِﺪَﺓٍ ﻭَّﺧَﻠَﻖَ ﻣِﻨْﻬَﺎ ﺯَﻭْﺟَﻬَﺎ ﻭَﺑَﺚَّ ﻣِﻨْﻬُﻤَﺎ ﺭِﺟَﺎﻟًﺎ ﻛَﺜِﻴْﺮًﺍ ﻭَّﻧِﺴَﺎٓﺀً ﻭَﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠّٰﻪَ ﺍﻟَّﺬِﻯْ ﺗَﺴَﺎٓﺀَﻟُﻮْﻥَ ﺑِﻪٖ ﻭَﺍﻟْﺎَﺭْﺣَﺎﻡَ ﺍِﻥَّ ﺍﻟﻠّٰﻪَ ﻛَﺎﻥَ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﺭَﻗِﻴْﺒًﺎ

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்
அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்
பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்
ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்
அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்
மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்
(அல்குர்ஆன் : 4:1)

J . யாஸீன் இம்தாதி — இமாம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல்  வேர்கிளம்பி  குமரிமாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

தமிழ்நாட்டிலேயே அதிரை மேற்கு நகரம் தான் நம்பர் ஒன்.! எம்.எல்.ஏ புகழாரம்..!!

கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிரையில்...

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : காரைக்குடியிடம் வீழ்ந்தது மதுரை!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான...

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை பார்த்த இஞ்சினியர் உதவி..!!

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள்...

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : ஆலத்தூரை வீழ்த்தியது மன்னை!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான...