தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் பேரூராட்சியை உள்ளடக்கிய சேர்மன்வாடி,புதுமனைத்தெரு,செக்கடிப்பள்ளி போன்ற பகுதிகளை உள்ளடக்கிய சாலைகள் குண்டுகுழியுமாக இருக்கிறது.இதனால் வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.இந்த சாலை பல தெருப்பகுதிகளை ஒருங்கிணைக்கும் பகுதியாகும்.நான்கைந்து தெருக்களை சார்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ள பிரதான சாலையாக பயன்படுத்துகின்றனர்.மேலும் சென்னை செல்வதற்கான பல ஆம்னி பஸ்களின் அலுவலகங்கள் இங்கு தான் செயல்படுகின்றன.அதனால் இந்த பகுதிகள் பரபரப்பாகவே காணப்படும்.இதற்கான நிரந்தர நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
கடந்தகாலங்களில் போடப்பட்ட சாலைகள் போல் அல்லாமல் உடனடியாக தரமான சாலையை இப்பகுதிகளில் உடனடியாக அதிராம்பட்டிணம் பேரூராட்சி நிர்வாகம் அமைத்து தரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் தொடர் கோரிக்கையாக இருக்கிறது.நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்???
அதிரையில் காணாமல் போன தார்சாலைகள்,மீட்டு தருமா பேரூராட்சி நிர்வாகம் (படங்கள் இணைப்பு)!!!
23
previous post