மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலை மற்றும் சர்வீஸ் சாலைகள் அனைத்தும் இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் ஆறு போல் ஓடியது. அப்ேபாது 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல சாலையை கடந்துள்ளார். தண்ணீரின் வேகத்தில் அவரால் சாலையை கடக்க முடியவில்லை.
கால் தவறி தண்ணீரில் விழுந்தார். விழுந்த சிறிது நேரத்தில் முதியவர் மாயமானார். இதைபார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து முதியவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்க வில்லை. பின்னர் நேற்று அதிகாலை முதியவர் மெரினா கடற்கரையில் உள்ள கடையோரம் உயிரிழந்த நிலையில் கிடந்தார். வேப்பேரி, பெரியமேடு, சென்ட்ரல் பகுதி முழுவதும் சாலைகளில் மழை நீர் தேங்கி ஆறுபோல் காட்சியளித்தது.