Home » துபாயில் ஸ்டாலினுடன் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்திப்பு( படங்கள் இணைப்பு)!!!

துபாயில் ஸ்டாலினுடன் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்திப்பு( படங்கள் இணைப்பு)!!!

by admin
16 comments

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜா மாகணத்தில் நடந்து வரும் சர்வதேச புத்தக திருவிழாவிற்கு ஷார்ஜா ஷேக்கின் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக வருகைதந்த திமுக செயல் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை, அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் அமீரக கிளை (SHISWA) நிர்வாகிகள் சார்பில் K.ஷஃபீக், N.ஜமாலுதீன், F.இப்ராஹிம், ஃபைஸல் ஆகியோர் சந்தித்து ஊர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை மனுவாக வழங்கினர்.

நீர்நிலை மேம்பாடு, வடிகால் வசதிகள், மேல்நிலை தண்ணீர் தொட்டி மற்றும் சுகாதாரம் சார்ந்த விடயங்களை மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களிடம் எடுத்துச் சொல்லி உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும்படி விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பரிந்துரைப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

இச்சந்திப்பிற்கான ஏற்பாடுகளை அதிரை A.S.M சாகுல் ஹமீது (ஃப்ரெஸ்கோ சூப்பர் மார்க்கெட் -சென்னை) அவர்கள் செய்திருந்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter