தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பாக டிசம்பர் 6 பாபர்மஸ்ஜித் இடிப்பு தினம் சம்மந்தமாக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை அஹமது ஹாஜா தலைமையில் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது.கூட்டத்தில் இந்த வருடம் டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளாக தஞ்சை ரயில் நிலையம் அருகில் மாநில தலைமை அறிவுறுத்தலின் பேரில் தோழமை கட்சியோடு மாபெரும் கருப்பு சட்டை அணிந்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதில் தமுமுக மாவட்ட தலைவர் அதிரை ஹாஜா மற்றும் தமுமுக மாவட்ட செயலாளர் PKT சேக் மற்றும் தமுமுக மாவட்ட பொருளாளர் மதுக்கூர் Er இலியாஸ் மற்றும் மமக மாவட்ட செயலாளர் மதுக்கூர் ஜபருல்லாஹ் மற்றும் தமுமுக துணை செயலாளர் அதிரை முஹம்மது சேக்காதி
தஞ்சை ரியாஸ் மற்றும் மமக மாவட்ட துணை செயலாளர் தஞ்சை ஜப்பார் & திருப்பந்துருத்தி அப்துல் அஜிஸ் மற்றும் தமுமுக மாவட்ட வணிகர் அணி (MVS) செயலாளர் முஹம்மது பந்தர் முஸ்தபா மற்றும் மாவட்ட மருத்துவ அணி செயளாலர் அதிரை வாகா சலீம் மற்றும் மாவட்ட மணிதவள அணி செயளாலர் மதுக்கூர் நிசார் அகமது மற்றும் மாவட்ட சமூக நீதி மாணவர் இயக்க (SMI) செயலாளர் செந்தலை முஹம்மது மீராசா ஆகியோர் கலந்துக்கொண்டனர்..
தகவல்: அதிரை Waha Saleem.,