பெங்களூரில் உத்தர கன்னடா கடலோர மாவட்டத்தில் உள்ள சிர்சி தொகுதியின் எம்பியாக உள்ளார் அனந்தகுமார் ஹெக்டே (51). இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சராகவும் இருந்தார்.
இந்த நிலையில் அனந்தகுமார் ஹெக்டே ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்ததால் அவரது கணக்கை பிளாக் செய்துவிட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பதிவிட்ட ட்வீட்டுகளை டெலிட் செய்தால் ட்விட்டர் கணக்கு விடுவிக்கப்படும் என அந்த நிறுவனம் தகவல் அனுப்பியுள்ளது.
சமீப காலமாகவே ட்விட்டரில் பொய்யான தகவல் மற்றும் சர்ச்சைக்குரிய மற்றும் அவதூறு கருத்துகளை பரப்புபவர்களின் பதிவை ட்விட்டர் நிறுவனம், நீக்கி வருவதோடு தேவைப்பட்டால் அவர்களின் ட்விட்டர் கணக்கையும் தற்காலிகமாக முடக்கி வருவது குறிப்பிடத்தக்கது.