தினந்தந்தி பவளவிழா இன்று காலை 10.30 மணியளவில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறுகிறது. இதற்காக, டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று காலை மோடி சென்னை வந்துள்ளார். தினத்தந்தி விழாவில் கலந்து கொண்டு விட்டு, பகல் 12.30 மணியளவில் அவர் திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று அவரை சந்திக்கிறார்.
மேலும், பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவரின் இல்லத் திருமண விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார். அதன் பின் அவர் பகல் 1.30 மணியளவில் அவர் விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார் எனக் கூறப்படுகிறது.
நீட் தேர்வு, மீத்தேன் வாயு, ஹைட்ரோகார்பன் திட்டம் உட்பல பாஜகவின் பல திட்டங்களை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில், கருணாநிதி-மோடி சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.