Home » தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்க கேரளாவில் ஒரு புதுமையான திட்டம் !

தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்க கேரளாவில் ஒரு புதுமையான திட்டம் !

0 comment

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் முதன்முதலாக கேரளா மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது. அதேபோல் தொடக்க காலத்தில் கேரளாவில்தான் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

ஊரடங்கு உத்தரவை சரியாக கடைபிடித்தல், பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பை கண்டறிதல், பரிசோதனையை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளில் அம்மாநில அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.நோயாளிகளை குணப்படுத்தி அனுப்புவதிலும் முதன்மையான மாநிலமாக கேரளா செயல்படுகிறது.

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் முற்றிலுமாக ஒழிக்க சில மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் வெளியில் சென்றால் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. சில இடங்களில் மக்கள் கொரோனா வைரஸின் ஆபத்தை அறியாமல் கூட்டம்கூட்டமாகச் செல்கின்றனர்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க என்ன செய்யலாம் என யோசித்த கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கோம் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் ஒரு புதுமையான திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.

அங்குள்ள மக்கள் வீட்டைவிட்டு வெளியே சென்றால் கட்டாயம் குடை கொண்டு செல்ல வேண்டும் என்று கிராம பஞ்சாயத்து அறிவித்துள்ளது. குடையை பயன்படுத்தும்போது இரண்டு குடைகள் ஒன்றுக்கொண்டு இடிக்காமல் விரிக்கப்பட்டிருக்கும் போது எப்படியும் ஒரு மீட்டர் இடைவெளி உண்டாகும். இதனால் தானாகவே இடைவெளியை கடைபிடிக்க வேண்டியதாகிவிடும்.

இப்படி செய்தால் மக்கள் தானாகவே சமூக இடைவெளியை பின்பற்றத் தொடங்கி விடுவார்கள். இதன் காரணமாக தண்ணீர்முக்கோம் பகுதியில் யார் எங்கு சென்றாலும் குடைபிடிப்பது கட்டாயம் என கிராமப் பஞ்சாயத்து அறிவித்துள்ளது. இதற்காக மலிவு விலையில் அங்குள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் குடை விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக தண்ணீர்முக்கோம் பகுதிமக்கள் எங்கு சென்றாலும் குடையுடன்தான் செல்கிறார்கள்.

குடைபிடித்துச் செல்வதன் மூலம் ஒருவர் மற்றவரை தொடுவது தவிர்க்கப்படும் என்றும், ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே குறைந்தபட்சம் ஒருமீட்டர் இடைவெளி பேணப்படும் என்றும் அம்மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் ட்விட்டர் பதிவில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter