தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியை ஒட்டிய நெடுஞ்சாலை பகுதி மிகவும் மோசமான நிலையில் போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக இருக்கிறது.இந்த சாலையை சீரமைக்க பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நெடுஞ்சாலைத் துறை காலம் தாழ்த்தியே வருகின்றனர்.மேலும் வாகன ஓட்டிகளும்,பள்ளி மாணவ,மாணவிகளும் இந்த சாலையை கடந்து செல்வதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.சாலையின் பள்ளமான பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பதால் இரவுநேரங்களில் விபத்துகளும் நடைபெறுகிறது.உடனடியாக சாலைகளை சீரமைக்க வேணடும் என மல்லிப்பட்டிணம் பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.மூன்று நாட்களுக்கு முன் தான் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரசு மேல்நிலை பள்ளிக்கு வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பட உதவி: முகமது ஒசாமா