அதிரை பேரூராட்சியின் வளர்ச்சி பணிக்காக மத்திய மாநில அரசுகள் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. குறிப்பாக அதிரையில் உள்ள செட்டியாகுளம்(50), செய்னாங்குளம்(50), காட்டுக்குளம்(55) ஆகிய மூன்று பிரதான குளங்களை தூர்வாரி கரைகளை பலப்படுத்த சுமார் ஒரு கோடியே 55 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து டெண்டர்கள் கோரப்பட்டு மூன்று குளங்களிலும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன. மூன்று குளங்களை சுற்றிலும் பதிக்கப்பட்ட கற்கள் சில மாதங்களிலேயே பெயர்ந்து போனது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட காட்டுக்குளத்தின் பணிகள் சரிவர முடிக்கப்படாத நிலையில் தற்போது பரிதாபமாக காட்சி அளிக்கிறது.
எதிர்கால சந்ததிகளின் நலனை பற்றி சற்றும் கவலைப்படாத பணம் தின்ணிகள் குளங்களை கபலிகரம் செய்துவிட்டனர்.
ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அதிரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உரிய விசாரணை நடத்தி ஊழல் பெருச்சாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.