சென்னையைஅடுத்த மாதவரத்தில் போலிபத்திரம் தயாரித்து 5 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்க முயன்ற 3 பேர் கைது இரண்டுபேர் தலைமறைவு
திருவளளூர் மாவட்டம்
மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கத்தில் பொன்னேரியை சேர்ந்த தாமோதரன் என்பவருக்கு சொந்தமான இடம் 45 சென்ட் உள்ளது.அந்த இடத்தை தாமோதரனுடைய உறவினர் பெரம்பூரில் மின் வாரியத்தில் ஊழியராக பணிபுரியும் பாஸ்கர் மற்றும் அவருடைய நன்பர் சதீஸ் என்பவரும் சேர்ந்து போலியாக பத்திரம் தயாரித்து பொன்னேரி நெய்தவாயல் கிராமம் லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் என்பவருடைய பெயருக்கும் இவருடைய மனைவியாக ஜெயம்மாளை சித்தரித்து ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்த மரகதம் என்பவரது பெயரிலும் போலியாக பத்திரங்களை தயாரித்து
அதை மாதவரத்தில் உள்ள சஞ்சித் குமார் என்பவருக்கு பவர் பத்திரம் செய்து கொடுத்துள்ளனர்,
மேலும் அந்த இடத்தை 5 கோடிக்கு விலைபேசி விற்க முற்பட்ட போது
நிலஉரிமையாளர் தாமோதரனுடைய மகன் சேகர் என்பவருக்கு தெரியவந்தது.
இது சம்பந்தமாக அவர் மாதவரம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் மாதவரம் போலீசார் போலிசார் நடத்திய விசாரணையில் போலி. பத்திரம் மூலம் விற்பனை செய்யமுயன்றது தெரியவந்தது.
இது சம்பந்தமாக மாதவரத்தை சேர்ந்த சஞ்சித் குமார் வயது 33 செல்வம் வயது 64 ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்த மரகதம் வயது 55ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மின் வாரிய ஊழியர் பாஸ்கர் மற்றும் சதீஷ் உட்பட 2 நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.