216
அதிராம்பட்டினத்தில் கோடை வெயிலின் தாக்கம் சில நாட்களாகவே அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே ரமலான் மாதம் தொடங்கியதால் நோன்பாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இதனை ஈடு செய்யும் அளவிற்கு ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில், அதிராம்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக லேசான இடி, மின்னலுடன் கூடிய நல்ல மழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய இம்மழையால் வெப்பம் சற்று தணிந்து குளிச்சியான சூழல் நிலவுகிறது.