63
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பைக் ஓட்ட கூடாது, வாய்-மூக்கு கவசம் அணியாவிட்டால் அபராதம் என வளைத்துவளைத்து ஏராளமான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தேவையின்றி வெளியில் யாரும் சுற்ற வேண்டாம் என இளசுகளுக்கு சான்றோர் பெருமக்கள் அறிவுரை கூறியதுடன் மீறினால் பெற்றோரிடம் போட்டு கொடுத்துவிடுவோம் என மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், தங்களுக்கு அறிவுரை கூறிவிட்டு சான்றோர் பெருமக்கள் சாலையோரங்களில் பார்லிமெண்டரியை நடத்து எந்தவகை அறிவுடைமை என அதிரை, மல்லிப்பட்டினம், முத்துப்பேட்டை இளசுகள் குமுறி வருகின்றனர். மொத்தத்தில் ஊருக்குத்தான் உபதேசம்…