அதிரை பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வடிகால் அமைக்கும் பணியை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி கடைதெரு, உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் அமைக்கப்பட்ட நிலையில், மொய்தீன் ஜும்மா பள்ளி பின்புறம் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளன.
அது முறையான வாட்டமின்றி அமைக்கப்பட்டதால் கால்வாயில் சில பகுதிகளிலேயே தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இந்நிலையில் இந்த கால்வாயை மூடும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான இடங்களில் பேரூராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்ட வடிகால்கள் வாயை பிளந்து நிற்கும் நிலையில் அவசர கதியில், கால்வாயை மூடும் அவசியத்தை அதிகாரிகள் விளக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.