178
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் இன்று(ஏப்.30) மதியம் பலத்த இடி,மின்னலால் வீட்டு தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் தீ ஏற்பட்டு கருகியது.
மல்லிப்பட்டிணம் காதிரியா தெருவில் உள்ள ஒருவர் தனது வீட்டு தோட்டத்தில் மரங்களை வளர்த்து வந்தார்,இந்நிலையில் மல்லிப்பட்டிணம் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது.அப்போது ஏற்பட்ட மின்னலுடன் இடியால் அங்கிருந்த தென்னை மரத்தில் விழுந்து நெருப்பு எரியத் தொடங்கியது, அருகில் உள்ளவர்கள் தீயை உடனடியாக அணைத்தனர்.