75
தஞ்சை மாவட்டம்; பட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு விற்பனை செய்யும் கடைகளுக்கு சானிடைசர் பயன்படுத்த நகராட்சி ஆணையர் உத்தரவு.இன்று (30-04-2020) வியாழக்கிழமை காலை நகராட்சி ஆணையர் பட்டுக்கோட்டையில் பகுதியில் திறக்கப்பட்டுள்ள அத்தியாவசிய கடைகளை ஆய்வு செய்தார். அப்பொழுது பலகடைகளில் (சானிடைசர்/வாஸ்பேஷன்) கை கழுவும் வசதியானது அமைக்கப்படாமல் இருந்தது.இதனை கவனித்த நகராட்சி ஆணையர் கட்டாயம் கை கழுவும் வசதி அமைக்க வலியுறுத்தி கடை உரிமையாளர்களை எச்சரித்து சென்றனர்.