தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படும் நபர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, மேலும் நோய் தொற்று ஏற்படாத வகையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நெய்வாசல் பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெய்வாசலில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் IAS நேரில் சென்று அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்கினார். அப்போது ஒரத்தநாடு வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.