தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வசிக்கும் மக்கள் பொதுவாகவே உணவு என்றால் அதற்கு மரியாதைக்கொடுத்து ,சுவை உணர்ந்து சாப்பிடுவார்கள்.
இதை தொடர்ந்து பலர் காரைக்கால் பாரதி நகர் பகுதியில் உள்ள மந்தி ரெஸ்டாரண்ட் நோக்கி தற்பொழுது அதிகளவில் பயணித்து வருகின்றனர்.
அப்படி அங்கு என்ன அதிசயம்? என்று பார்த்தால் அரபு நாடுகளில் கிடைக்கும் உணவான மந்தி உணவு அங்கு கிடைகிறதாம்.
அங்கு மாலை சுமார் ஆறு மணிக்கு மேல் மந்தி உணவு சாப்பிடவேண்டும் என்றே பலர் அப்பகுதிக்கு சென்று வருகின்றனர்.
காரைக்கால் கடற்கரை காற்றை சுவாசிக்க செல்லும் பலர் அந்த மந்தி ரெஸ்டாரண்ட் கண்டிப்பாக சென்று வருகின்றார்கள்.
அதேபோல் , அதிரையை சேர்ந்த பலர் விடுமுறை காலங்களிலும் , முக்கியமான அலுவலகம் சார்ந்த சந்திப்புகளையும் நடத்தி வருவது குறிப்பிடதக்கது.