38
நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மே 3 தேதி வரை ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது. தற்போது ஊரடங்கு முடிவு பெற நிலையில் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
மே 3 ஆம் தேதியுடன் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.