ஐக்கிய அரபு அமீரகம், துபாயில் DEAR HEALTH மெடிக்கல் சென்டர் சார்பாக இரண்டாம் ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று(11.11.2017)
சனிக்கிழமை நடைபெற்றது.இந்த விருது நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் தட்டாத்தெருவை சேர்ந்த கவியன்பன் கலாம் அவர்கள் தமிழ் புலவர் விருது வழங்கி அவரை கௌரவித்தது. கவியன்பன் கலாம் அவர்கள் தொடர்ந்து பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்கள்.இந்நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
கவியன்பன் கலாம் அவர்கள் தமிழ் மொழியில் பல்வேறு தலைப்புகளில் கவிதை தொகுப்புகளை வழங்கி தனித்துவனமான அடையாளத்தை தொடர்ந்து வழங்கு வருகிறார்கள்.தான் பிறந்த ஊருக்கும்,மாநிலத்திற்கும்,பயின்ற மொழிக்கும் பெருமை சேர்க்கும் அதிரை கவியன்பன் கலாம் அவர்கள் ஏராளமான படைப்புகளை இயற்றவும்,இதுபோன்ற இன்னும் ஏராளமான விருதுகளை பெறவும் அதிரை எக்ஸ்பிரஸ் வாழ்த்துகிறது.