Home » அதிரை : சீமான் கட்சியிலிருந்து வெளியேற துடிக்கும் தம்பிகள் ?

அதிரை : சீமான் கட்சியிலிருந்து வெளியேற துடிக்கும் தம்பிகள் ?

by
0 comment

நாம் தமிழர் கட்சி ஆரம்பித்த காலம் தொட்டே அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் இருந்து வருகிறார்.

இவரின் ஆற்றல்மிகு பேச்சாற்றலால் ஈர்த்த இளைஞர்கள் அக்கட்சியில் தங்களை இணைத்து வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க துல்கர் சல்மான் எடுத்த திரைப்படத்தில் பிரபாகரன் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த நாம் தமிழர்கட்சியினர் வெகுண்டு எழுந்தனர்.

ஆனால் நாம் தமிழர்கள் துல்கர் சல்மான் மீது புழுதி வாரி வீசுவதில் தவறில்லை.

இதனை விடுத்து துல்கர் சல்மான் சார்ந்த மதத்தின், போற்றுதலுக்கு உரிய முஹம்மது நபியை தரம் தாழ்த்தி எழுதி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் கட்சிக்குள் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஒரு வித நெருடலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிரை நாம் தமிழர் கட்சியின் அயலக உறுப்பினர் ஒருவர் தனது அடிப்படை உறுப்பினர் பதவிகள் உள்ளிட்ட அனைத்து பொருப்புகளில் இருந்தும் விடுபடுவதாக மாநில தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து கட்சியின் தலைமை ஆயிரம் விளக்கங்களை கொடுத்தாலும், கட்சியின் கொள்கைக்கு முரணாக அடுத்த மதத்தின் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் அந்த கயவர்கள் மீது இதுவரை வழக்கு ஏதும் இதுவரை தொடர வில்லை என்றும், இதனால் அடைந்த விரக்தியே அக்கட்சியில் இருந்து விலக நேரிடுவதாக தங்கள் தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter