கவல்துறையினரிடம் மஜக பொதுச்செயலாளர் வேண்டுகோள்..!!
மதுக்கூரில் கடந்த 30.10.17 அன்று இஸ்லாமிய ஜனநாயக முன்னனியை சேர்ந்த மைதீன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அதுகுறித்து கொலையாளிகள் 10பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மைதீனொடு இணைந்து செயல்பட்டார்கள் என்று காரணம் காட்டி ஏராளமானோர் மீது பொய் வழக்கு போடுவதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களை தொந்தரவு செய்வதாகவும், பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து மிரட்டுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
குறிப்பாக மதுக்கூர் காவல் நிலையத்தில் உளவு துறையில் பணியற்றும் ரவி என்பவர் மேல் அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை சொல்லுவதாகவும், அவர் சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்களை கேவலமாக பேசுவதாகவும் இதனால் மதுக்கூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மஜகவிற்கு மக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட எங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மீது போலீஸ் பொய் வழக்கு போடுவதை கண்டித்து மதுக்கூர் மைதீன் தாயார் போலீஸ் நிலையம் எதிரே தீக்குளிக்க சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே மஜக துணை பொதுச்செயலாளர் ரவுத்தர்ஷாவின் அழைப்பின் பேரில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA மதுக்கூர் விரைந்தார். அவருடன் மாநில செயலாளர் நச்சிக்குளம் தாஜுதீனும் விரைந்தார்.
மதுக்கூர் மஜக அலுவலகத்தில் இந்து, முஸ்லீம் சமுதாயங்களை சேர்ந்த பெண்களும், இளைஞர்களும் திரண்டு வந்து போலீஸ் அராஜகங்களை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் புகார் கூறினார்.
மதுக்கூர் மைதீன் தாயார் ரஹ்மத் நிஷா தலைமையில், இந்துமதி, ஹிவானா, மங்கையர்கரசி, சந்தியா, ஜெய்புல் நிஷா, ஜாஸ்மின், மலர்கொடி, நுர்னிஷா, ராஜபுனிஷா உள்ளிட்ட பெண்கள், காவல்துறை தங்கள் குடும்பத்து ஆண்களை சம்பந்தமில்லாமல் நள்ளிரவில் விடு புகுந்து மிரட்டுவதாக கூறினர்.
உடனடியாக டி.எஸ்.பி செங்கமலக்கண்ணனை சந்தித்து மதுக்கூர் மக்களின் கோபங்களையும், புகர்களையும் மஜக பொதுச்செயலாளர் எடுத்துக்கூறினார்.
மேலும் உளவுத்துறை அதிகாரி ரவி பொய் வழக்கு போடுவேன் எனக்கூறி பணம் கேட்டு மிரட்டுவதாக வந்த புகாரையும் எடுத்துக்கூறினார்.
மேலும் இது குறித்து IGயின் கவனத்துக்கும் தேவைப்பட்டால் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்வோம் என்று கூறினார்.
மதுக்கூரில் போலீசார் மனித உரிமை மீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கண்டிப்புடன் கூறிவிட்டு, மக்களை அமைதிகாக்குமாறும் கேட்டுக்கொண்டார்.