Home » உலக பத்திரிக்கை சுதந்திர நாள் வாழ்த்து !

உலக பத்திரிக்கை சுதந்திர நாள் வாழ்த்து !

by
0 comment

பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறோம்.

இந்நாளில் ஜனநாயகத்தின் நான்காவது தூணை தகர்க்க நினைக்கும் எந்த ஒரு அமைப்பையும் அனுமதியோம் என்றும், உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினூடாக பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகையாலர்கள் எழுத்தாளர்கள் அனைவரையும் நினைவில் கொள்கிறோம்.

விமர்சகர்களுக்கு அப்பாற்பட்டு அரசியல் அடக்குமுறைக்கும் எதிராக உண்மைத் தன்மையை உலகுக்கு காட்டும் காலத்தின் கண்ணாடிகளான அனைத்து பத்திரிக்கை சொந்தகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அதிரை எக்ஸ்பிரஸ் மகிழ்ச்சி அடைகிறது.

– ஹசன் ( அதிரை எக்ஸ்பிரஸ் ஆசிரியர் )

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter