Home » நள்ளிரவில் தொழுகை என்று பரப்பிய கும்பலின் பொய்யை அம்பலமாக்கிய INTJ…!

நள்ளிரவில் தொழுகை என்று பரப்பிய கும்பலின் பொய்யை அம்பலமாக்கிய INTJ…!

0 comment

வேலுர் மாவட்டம் திருப்பத்தூரில் தொழுகை நடைபெறுவதாக பொய்யான தகவலை பரப்பிய பாஜக ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில துணை பொது செயலாளர் முஹம்மது ஷிப்லி காவல்துறை உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார்

அதில் திருப்பத்தூரில் கட்டுப்பாட்டை மீறி யாரும் தொழுகை நடத்தவில்லை என்றும்,பொய்யான தகவலை பரப்பி சட்ட ஒழுங்குகிற்கு குந்தகம் விளைவிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிபிட்டு இருந்தார்.

மேலும் அதில் இடம்பெற்ற புகைப்படம் 2018ஆண்டு அகமதாபாத்தில் எடுக்க பட்ட புகைப்படம் என்றும் அதற்க்கான சான்றையும் விளக்கி உள்ளார்.

இதுகுறித்து விசாரணைக்கு திருப்பூரை சேர்ந்த மணிகண்டன் பிரபு நாயுடு என்ற பாஜக ஆதரவாளர் போலிசார் அழைத்து விசாரித்தனர் தவறை ஒப்புக்கொண்ட பாஜக ஆதரவாளர் இனிமேல் சமூக ஊடகங்களில் பொய்யான தகவலை பரப்ப மாட்டேன் என்றும் பொய் பரப்பியதற்க்காக பகிரங்க மன்னிப்பு கோருவதாகவும் எழுதி கொடுத்து சென்றுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter