114
தஞ்சாவூர் மாவட்டம் அதிரையில் தங்கி கட்டுமான தொழிலில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்திருந்தனர்,
கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்கு அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் அதிரை வண்டிப்பேட்டையில் தங்கி இருக்கும் வடமாநில தொழிலாளர்களை பட்டுக்கோட்டை டிஎஸ்பி சுப்ரமணியன் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது உதவி ஆய்வாளர் ராஜு உடனிருந்தார்.