சென்னை : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் , திருவாரூர் , நாகப்பட்டினம், விழுப்புரம் , கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.இதனால் வெள்ள நீர் புகுந்து பல இடங்களில் சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது. பொதுமக்கள் பணிக்கு செல்வதில் இடையூறு ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று சென்னையில் மழை சற்று குறைந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை திரும்பிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் மழை பெய்து வருகிறது.சென்னை மற்றும் திருவள்ளூரில் தொடர்மழை பெய்து வருவதனால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மழையால் பள்ளிக்கு மாணவர்கள் செல்ல முடியாத சூழலில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர் கனமழை எதிரொலி : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!
More like this
அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...
அதிரையில் நாளை மின்தடை!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வரும் 28/01/2025 செவ்வாய்க்கிழமை...
அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்டுக்கோட்டை துணை மின் நிலைய...