ஹலாப்ஜா: ஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 135 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஈராக்கில் இன்று அதிகாலை ஹலாப்ஜா நகரம் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் பாக்தாத்தில் இருந்து 350 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி 135 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கமானது பாகிஸ்தான், ஈரான், குவைத், துபாய், இஸ்ரேல் என பல நாடுகளையும் அதிரவைத்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு ஈரானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 26,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.