கொரோனா வைரஸின் பரவல் காரணமாக இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டு உள்ளன.
இந்நிலையில் வரும் கல்வியாண்டிற்கான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் திறப்பு தேதியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அதன்படி நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 2020-2021ஆம் ஆண்டிற்கான வகுப்புகளை துவங்கலாம் என்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.