Home » அதிரைக்குள் நுழையும் பால்காரர்கள் கோவிட் 19 டெஸ்ட் கட்டாயம் எடுக்க வேண்டும் – ஜமாத் அதிரடி !!

அதிரைக்குள் நுழையும் பால்காரர்கள் கோவிட் 19 டெஸ்ட் கட்டாயம் எடுக்க வேண்டும் – ஜமாத் அதிரடி !!

by
0 comment

அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவுக்கு உட்பட்ட ஜமாத்தார்கள், ஆலோசனை கூட்டம் சமூக இடைவெளி விட்டு இன்று நடைபெற்றது.

கொரானா நோயை காரணம் காட்டி அதிரையர்கள் வெளியில் செல்லாதவாறு பல கிராமங்களில் அந்தந்த பகுதி பிரதிநிதிகள் தடையை ஏற்படுத்தினர்.

இதனால் கிராமங்களில் தோப்புகள் வைத்திருந்தவர்கள் நிறைய பாதிப்புக்கு உள்ளானார்கள்.

தங்கள் பகுதிகளில் தடையை ஏற்படுத்தியதால் அங்கிருந்து வரும் பால் காரரர்கள் கொரானா பயத்தால் ஊருக்கு நுழைவதில்லை என்ற தகவல் பரவியது.

இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் கொரானா நோயாளிகள் குணம் பெற்று வீடு திரும்பும் இந்நேரத்தில் பால் காரர்கள் மீண்டும் ஊருக்கள் சர்வ சாதாரணமாக பால் விநியோகம் செய்து வருகின்றனர்.

முழுமையாக கண்டைன்மண்ட் பகுதியாக உள்ள நமது பகுதிக்குள் வெளியில் இருந்து வரும் வியாபாரிகள் பால் காரர்கள் வரும் 17ஆம் தேதிக்கு பின்னர் கோவிட்-19 டெஸ்ட் எடுத்து நெகட்டிவ் உறுதி செய்தபின் ஜமாத்தினரை அனுகி அனுமதி அட்டையுடன் தொடர்ந்து பால் விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பிரபல பால் நிறுவனத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்துள்ள நிலையில் நம்மை நாமே தற்காத்து கொள்ள இந்த பரிசோதனை அவசியமாகிறது.

எனவே வெளியூர், கிராமங்களில் இருந்து அதிரைக்குள் வரும் வியாபாரிகள்,பால் காரர்கள் கண்டிப்பாக கோவிட் 19பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று ஜமாத்தில் சமர்பிப்பது கட்டாயம் என ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பான சிஸ்யா தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter