தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சி முன் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட 144 தடை உத்தரவினால் மாற்றுத்திறனாளிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர், எனவே அவர்களுக்கு நிதியுவி 5000 ரூபாய் அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில்
தஞ்சை மாவட்ட தலைவர் பஹாத் முகமது தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.