Home » விசாகப்பட்டினத்தில் பயங்கரம், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு…!

விசாகப்பட்டினத்தில் பயங்கரம், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு…!

by admin
0 comment

விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக சாலையில் மக்கள் கும்பல் கும்பலாக மயங்கி விழுகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்ஆர்‌வெங்கடாபுரம்‌ கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது.

இங்கு ‌இன்று அதிகாலை திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. காற்றில் கலந்து பரவிய விஷ‌வாயுவால் கிராமத்தினருக்கு கண்களில் எரிச்சல் மற்றும்‌ மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இந்த பாதிப்புகளால் குழந்தை உள்ளிட்ட 13 பேர் ‌உயிரிழந்தனர். மேலும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சாலையில் நடந்து சென்றவர்கள் மயங்கி விழுந்தனர். தகவலறிந்து‌ ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் விரைந்த காவல்துறையினர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனு‌ப்பினர்.

தீயணைப்புத் துறையினரும் மீட்புப்பணிக‌ளில் ஈடு‌பட்டுள்ளனர். 3 கிலோ மீட்டர் சுற்ற‌ளவில் வசிப்போரை மீட்‌டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரசாயன ஆலையில் நேரிட்ட விஷவாயு கசிவை கண்டறிந்து சீரமைக்கும் பணிகளை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர். முன்னெச்சரிக்கைக்காக அப்பகுதி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வண்டியில் செல்லும்போதும், நடந்து செல்லும்போதும், நின்று கொண்டிருக்கும்போதும் வாயுக்கசிவால் மயங்கி விழுகின்றனர். சாலையில் மக்கள் மயங்கி விழுந்து ஆம்புலன்ஸிற்காக காத்துக்கிடக்கின்றனர். இதுகுறித்த வீடியோக்கள் பார்ப்பவரின் மனதை பதற வைக்கிறது.

வீடியோ :

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter