Home » நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து.!

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து.!

by
0 comment

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 6 ஆவது யூனிட்டில் மின் உற்பத்தியின்போது பாய்லர் திடீரென வெடித்தது. உடனடியாக தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த விபத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து ஏற்பட்டதையடுத்து, அனல் மின் நிலையம் முழுவதும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

வீடியோ;-

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter