Home » மதுபானக்கடைகளை உடனடியாக மூடக்கோரி தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் அறப்போராட்டம்..!!

மதுபானக்கடைகளை உடனடியாக மூடக்கோரி தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் அறப்போராட்டம்..!!

0 comment

கொரோனோ என்ற ஒரு கொடிய வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அடைத்து இருக்கக்கூடிய மதுக்கடைகளை திறப்பதற்க்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது போன்ற பேரிடர் காலகட்டங்களில் மதுக் கடைகளை திறப்பதனால் நிதானத்தில் இருக்கும்பொழுதே கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாத தமிழக அரசு குடித்துவிட்டு போதையில் இருக்கக்கூடியவர்களை எவ்வாறு கட்டுப்படுத்தும் என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறி..?

அதன் அடிப்படையிலே மதுக்கடைகள் திறக்கப்பட்டால் பலருடைய வாழ்வாதாரங்கள் மேலும் அழியும் என்பதும் நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களினுடைய வறுமை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு இது ஒரு மக்கள் விரோத செயலாக மனிதநேய மக்கள் கட்சி காண்கிறது.

இன்று மதுக்கடைகளை திறப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வலைத்தளங்களில் அறப்போராட்டமும் கூடுதலாக கருப்பு சட்டை அணிந்து சமூக விலகளை கடைபிடித்து கண்டன கோஷங்கள் தமிழகம் முழுவதும் அவர் அவர் வீட்டு வாசலில் இடப்பட்டு ஆர்ப்பாட்டத்தை தமிழக அரசை வன்மையாக கண்டித்து நடத்தியிருக்கிறது. தமிழக அரசு மேற்கண்ட காரணத்தை கவனத்தில் கொண்டு திறக்கப்பட்ட மதுபான கடைகள் உடனடியாக மூட வேண்டும் என்பதனை மனிதநேய மக்கள் கட்சி இதன் மூலம் வலியுருத்தி கேட்டுகொள்கிறது.

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி யின் மாநில செயலாளர் தஞ்சை I.M.பாதுஷா, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அப்துல் ஜப்பார், மாநகர தலைவர் லுக்மான் ஹக்கீம், மாநகர செயலாளர் முஹம்மது ஹூசைன், மாநகர துணை செயலாளர்கள் சதாம் ஹூசைன், மன்சூர் அலி, 21 வது வார்டு தலைவர் ஷாஜஹான், செயலாளர் ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter