தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள்,நடைபாதைகள் ஏற்கனவே சரிசெய்யப்படாமல் இருந்திருந்த நிலையில் கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழையால் பள்ளம்,மேடாகவும் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியும் நடப்பதற்கு வசதியில்லாமல் காணப்படுகிறது.
அதிராம்பட்டிணம் கடற்கரை தெருப்பகுதியில் அமைந்துள்ள பெண்கள் மதரஸாவிற்கு அருகே உள்ள பகுதியில் சாலைகள்,நடைபாதைகளில் உள்ள பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி இருந்ததால், சேரும்,சகதியுமாக காட்சி தந்தது.மதராஷாவிற்கு கல்வி கற்க செல்லக்கூடிய பெண்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில் பத்துக்கும் மேற்பட்ட தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணிமன்றத்தினர் சாலை மற்றும் நடைப்பாதைகளில் உள்ள பள்ளங்களுக்கு கல்,மணல்களை பரப்பி தண்ணீர் தேங்காத வண்ணம் நிரப்பி பள்ளங்களை சீரமைத்தனர்.பேரூராட்சி செய்யவேண்டிய பணிகள் என்று பாராமல் தன்னார்வத்துடன் களப்பணியாற்றிய தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினரை தெரு பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
இது போன்ற சமூகப்பணிகளில் தங்களையும் இணைத்துக்கொண்டு இளைஞர்கள் களப்பணியாற்றுவது அதிரையில் தொடர்ந்து அதிகரித்துவது குறிப்பிடத்தக்கது.