60
அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஜூம்ஆ பள்ளியில் கடந்த மே.6 அன்று அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் கடற்கரை தெரு ஜமாஅத் தலைவர் அப்துல் ரஜாக் தலைமையில் சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெற்றது.
இதில் பல்வேறு விடயங்கள் கலந்தாலோசனை செய்யப்பட்டது.இதில் கொரோனோ பரவல் அதிகரித்து வரும் வேளையில் ஆண்கள்,பெண்கள் ரமலான் பெருநாளையொட்டி வெளியூர்களுக்கு சென்று ஜவுளிகள்,வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கு செல்ல வேண்டாம் எனவும்,அப்படி செல்வதால் நோய் தொற்று பரவுவதற்கு வாய்ப்பு உண்டு,மேலும் அதனால் பலவித சிக்கல்கள் எழ வாய்ப்புண்டு ஆதலால் பயணங்கள் மேற்கொள்வதை அனைவரும் தவிர்த்து கொள்ள வேண்டுமென
அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.