213
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆர்சனிக்கம் ஆல்பம் -30 ஹோமியோபதி மருந்தை ஹோமியோபதி டாக்டர் அருண் சுதேஷ் இலவசமாக வழங்கினார். இது குறித்து அவர் கூறும்போது, கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் ஆயுஷ் மருத்துவத்தை பயன்படுத்தும் விதமாக தமிழக அரசானது ஆரோக்யம் சிறப்பு திட்டத்தை 23-04-2020 அன்று அரசு ஆணையாக வெளியிட்டுள்ளது(G.O.no-201). அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்(Immune Booster) ஹோமியோபதி “ஆர்சனிகம் ஆல்பம் 30” மருந்தை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றோம். ஆகவே பொதுமக்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.