92
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஊரடங்கை பயன்படுத்திக்கொண்டு கொரோனா நெருக்கடியிலும் டெல்லியில் காவல்துறையால் CAA எதிர்ப்பு போராளிகள் குறிவைக்கப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்த ஊரடங்கு காலத்தில் மத்திய அரசின் திரைமறைவு திட்டத்தை அம்பலப்படுத்தும் எண்ணத்தில் நாளை 10.05.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் முகநூல் பக்கத்தில் நேரலையில் இணையதள மாநாடு நடைபெற உள்ளது.
எனவே இந்த இணையதள மாநாட்டில் அனைவரும் இணைந்திட வேண்டும் என பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.