87
திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் (87) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பில் 2004 முதல் 2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராக டாக்டர் மன்மோகன் இருந்தவர் என்பதும், பொருளாதார நிபுணரான இவர் ரிசர்வ் வங்கி ஆளுநராகவும், 90களில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.