அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஜெகபர் சாதிக் என்கிற அதிரை முஜீப். சார்ஜாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர், குடும்பத்துடன் அமீரகத்தில் வசித்து வருகிறார்.
இவருக்கு முகமது சைஃப் என்ற மகனும், அலிஸ்ஸா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் சார்ஜாவில் உள்ள கல்ஃப் ஏசியன் ஆங்கிலப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். சார்ஜாவில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி நடைபெற்ற ராக்கெட் வடிவில் நின்று கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சியில் 21 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் அதிரையை சேர்ந்த இந்த இரண்டு மாணாக்கர்களும் கலந்துகொண்டு புதிய கின்னஸ் சாதனை படைத்தனர்.
ராக்கெட் வடிவில் நின்று கின்னஸ் சாதனை படைத்த முகமது சைஃப், அலிஸ்ஸா ஆகியோரின் சாதனையை பாராட்டி கின்னஸ் நிறுவனம், பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. அமீரகத்தில் நடைபெற்ற முயற்சி ஒன்றில் அதிரையை சேர்ந்த மாணாக்கர்கள் இருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளது அதிரையர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கின்னஸ் சாதனை படைத்த மாணாக்கர்கள் முகமது சைஃப், அலிஸ்ஸா ஆகியோரின் அதிரை எக்ஸ்பிரஸிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் எங்களை போல குழந்தைகள் கின்னஸ் சாதனை படைக்கவேண்டும் என்றும் எங்களுக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றினை தெரிவித்துக்கொண்டனர்.



கின்னஸ் சாதனை படைத்த மாணாக்கர்கள் இருவருக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் குழு சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.