72
தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் நிரந்த மின்ஊழியர் பணி அமர்த்த பொதுமக்கள் கோரிக்கை.
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணம் பகுதியில் அடிக்கடி மின் பழுதுகள் போன்ற காரணங்களால் மின்சார துண்டிப்பு ஏற்படுகிறது,இதனை சரிசெய்வதற்கு நாடியம் மின்நிலையத்தில் இருந்து ஊழியர்கள் வரவேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இதனை தவிர்த்திட மல்லிப்பட்டிணம் பகுதிகளுக்கு நிரந்தர மின்ஊழியரை நியமிக்க வேண்டும் என்றும், இந்த கோரிக்கையை பல ஆண்டுகளாக கூறி வருவதாகவும் இதனை அதிகாரிகள் கவனத்தில் கொள்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.