70
அதிரையில் தொழில் நிமித்தமாக தங்கியுள்ள வட நாட்டவர்களில் உள்ள இஸ்லாமியர்கள் பட்டினியால் நோன்பு வைக்கும் நிலையை ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ இணையதளத்தில் காணொளியுடன் கூடிய ஒரு செய்தி வெளியானது.
இதனையடுத்து பலரும் தொடர்பு கொண்டு வடநாட்டு நோன்பாளிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகத்தில் உள்ள முக்கியஸ்தர் ஒருவர் நம்மிடையே பேசினார், அதில் வடநாட்டு தொழிலாளர்கள் சஹர் உணவிற்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் பொறுப்பு ஏற்பதாக தெரிவித்தார்.