சவூதி அரேபியா,ரியாத்தில் உள்ள ஹாராவில் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம், கிளையின் தலைவர் S.சரபுதீன் முன்னிலையில் கூட்டம் 10.11.2017 அன்று நடைபெற்றது.
MSM.அப்துல் காதர் அவர்கள் கிராத் ஓதி கூட்டத்தை துவங்கி வைத்தார்.வரவேற்புரையை நிஜாமுதீன் அவர்களும்,சிறப்புரையை துணை செயலாளர் AM.அஹ்மத் ஜலீல் அவர்களும் நிகழ்த்தினர்.அறிக்கையை A.சாதிக் அஹ்மத் அவர்கள் வாசித்தார்.கூட்டத்தின் முடிவில் M.அப்துல் மாலிக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
நடைபெற்ற கூட்டத்தில் ஏழு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
தீர்மானங்கள்:
1.ABM ரியாத் கிளையின் சார்பாக இந்த வருடம் 2017ம் ஆண்டு உதவிய நல்ல உள்ளங்களை பாராட்டியும்,அவர்களுக்கு துஆ செய்யுமாறும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
2.வரும் வருடம் 2018ம் ஆண்டிற்கான ஆதரவற்றோர்களின் பென்ஷன் திட்டத்திற்காக பெயர்கள் பதிவு செய்யப்பட்டவர்கள் போக பழைய,புதிய நபர்கள் உங்களால் இயன்ற உதவியை தந்து நமதூர் ஆதரவற்றோர்களின் மாதாந்திர பென்ஷன் திட்டத்தை குறையில்லாமல் செலுத்திட உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
3.மாதாந்திர சந்தாக்களின் வசூலை மேம்படுத்தும் வண்ணம் தொகையை நிர்ணயித்து அதை தவறாது மாதம்தோறும் செலுத்தி பைத்துல்மாலின் ஏழை,எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு உதவிடுமாறும்,எல்லா உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது.அதன்மூலம ABMன் அனைத்து உறுப்பினர்களும் அவசியம் தங்களின் சந்தா தொகையை அனுப்பி தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
4.அடுத்த மாதக்கூட்டத்திற்கு முதல் வாரம் தனிப்பட்ட முறையில் பொறுப்புதாரிகள் விடுபட்ட நபர்களை அழைப்பதோடு,ஆதரவும்,பொருளாதாரமும் தந்து நமதூர் ஏழை,எளியவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்திடும் வண்ணம் ABM கூட்டத்திற்கு அழைப்பதென முடிவெடுக்கப்பட்டது.
5.ABM தலைமையகம் எடுக்கும் முயற்சியான வட்டியில்லா நகைக்கடன் திரும்ப பெற முழு ஆதரவு கொடுத்து,இந்த வட்டியில்லா கடனை மேலும் செம்மைப்படுத்த உதவுமாறு கடன் வாங்கியவர்களிடம் கூறுவது என தீர்மானிக்கப்பட்டது.
6.பிலால் நகர் கழிவறை விசயமாக நினைவூட்டப்பட்டு அதற்கு உதவி செய்துவரும் பலதரப்பட்ட சகோதரர்களின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து இதில் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் விருப்பம் உள்ள சகோதரர்கள் தாங்களால் இயன்ற உதவியை செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
7.இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு டிசம்பர் மாதம் 8ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு,அதில் அதிரைவாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.